Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்அஸூர் எயார், ஏர் பிரான்ஸ், சுவிஸ் நிறுவனங்கள் இலங்கைக்கு மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கின்றன!

அஸூர் எயார், ஏர் பிரான்ஸ், சுவிஸ் நிறுவனங்கள் இலங்கைக்கு மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கின்றன!

ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான Azure Air மற்றும் பிரான்சின் Air France ஆகியன இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, Azure Air இன்று (03) முதல் இலங்கைக்கான விமானங்களை இயக்கவுள்ளதுடன், Air France நாளை (04) முதல் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், 2023 மே 10 முதல் வாராந்திர விமானங்களுடன் இலங்கைக்கான தனது சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்க்கிறது என்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்விட்டர் செய்தியில் தெரிவித்தார்.

இது இந்த சீசனில் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் வலுப்படுத்தும், என்றார்.

குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானமொன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, குறித்த நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை ஜூன் தொடக்கத்தில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நீதிமன்றம் விமானத்தை விரைவாக விடுவித்த போதிலும், நாட்டில் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் உறுதியளித்த போதிலும், ரஷ்ய விமான நிறுவனங்கள் நாட்டிற்கு விமானங்களை இயக்க தயக்கம் காட்டின.

இதற்கிடையில், ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் கடந்த மாதம் மாஸ்கோ மற்றும் கொழும்பு இடையே விமான சேவையை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

இதேவேளை, எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் கொழும்புக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் ட்வீட் செய்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments