Thursday, March 28, 2024
Homeஇந்திய செய்திகள்அம்பானி எடுத்த அதிரடி முடிவு !அடுத்து என்ன நடக்கப்போகிறது !ரிஸ்க் எடுக்கிறாரா அம்பானி ..

அம்பானி எடுத்த அதிரடி முடிவு !அடுத்து என்ன நடக்கப்போகிறது !ரிஸ்க் எடுக்கிறாரா அம்பானி ..

முகேஷ் அம்பானி இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர் என்பதைத் தாண்டி நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதாரப் போக்கை தீர்மானிக்கும் முக்கியமான இடத்தில் உள்ளார் என்றால் மிகையில்லை.

முகேஷ் அம்பானி மட்டுமல்லாமல் இந்தியாவின் பெரிய வர்த்தகக் குழுமங்கள் இதே முக்கியத் துவத்தைப் பெறுகிறது.

காரணம் இந்தியப் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்குப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் முதலீடு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்குத் தனியார் நிறுவனங்களின் முதலீடும் முக்கியமானதாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல ஆயிரம் கோடி ரூபாயை புதிதாக முதலீடு செய்யத் தயாராக உள்ளது. இந்த நிலையில் முகேஷ் அம்பானி புதிய வர்த்தகத்தில் இறங்குவதற்காகவும், அதே நேரத்தில் புதிதாக ஒரு நிறுவனத்தை ஐபிஓ வெளியிடவும் 220 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்து ரிஸ்க் எடுக்க முகேஷ் அம்பானி தயாராகியுள்ளார்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாக ஐபிஓ வெளியிட்டு தனது குழுமத்தின் மதிப்பை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் தனது வாடிக்கையாளர் பலத்தை வைத்து தனது வர்த்தகத்தை மேம்படுத்த நிதித் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

Jio Financial Services நிறுவனம்

இதற்காக Reliance Strategic Investments Ltd என்ற நிறுவனத்தை Jio Financial Services Ltd ஆகப் பெயர் மாற்றி அதை ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து தனியாகப் பிரித்து ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் NBFC செயல்பட்டு பல்வேறு கடன் மற்றும் நிதி சேவைகளை அளித்து வருகிறது.

13 பில்லியன் டாலர்

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கணக்கின் படி Jio Financial Services Ltd சுமார் 6.1 சதவீத ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம் Jio Financial Services இந்தியாவின் 5வது பெரிய நிதி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கிக்கு அடுத்தபடியாக வருகிறது.

ரிஸ்க் தேவையா

இந்த நிலையில் Jio Financial Services Ltd வைத்திருக்கும் 6.1 சதவீத ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை அம்பானி குடும்பமோ அல்லது பிற ரிலையன்ஸ் நிறுவனமோ வாங்கவில்லை எனில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் முகேஷ் அம்பானியின் பங்கு 44 சதவீதமாகச் சரியும். இவ்வளவு பெரிய ரிஸ்க் தேவையா என்றால்..? அதற்கான பதிலும் உள்ளது.

பஜாஜ் பைனான்ஸ்

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் சிறிய அளவில் மேம்படுத்தினால் கூடப் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகச் சவால் விட முடியும், பேடிஎம் நிறுவனத்தை மொத்தமாக ஓரம்கட்ட முடியும்.

வாடிக்கையாளர்கள்

இதை விட முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ-வில் 420 மில்லியன் வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ ரீடைல் நிறுவனத்தில் 190 பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர், இந்தியா முழுவதும் இருக்கும் 16000 ரீடைல் கடைகள் எனக் கடன் வர்த்தகத்தை உருவாக்கப் பிரம்மாண்டமான வாய்ப்புகள் உள்ளது.

கன்ஸ்யூமர் கூட்ஸ் கடன்

இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் கன்ஸ்யூமர் கூட்ஸ்-க்கான கடன் அக்டோபர் மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது, இது ரிலையன்ஸ் டிஜிட்டல் முதல் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் வரையில் ஜியோ பைனான்சியல் தனது கடன் சேவை விரிவாக்கம் செய்ய முடியும்.

உலக வங்கி

2021 ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் தரவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 12% பேர் முறையான நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகக் கூறுகிறார்கள். இதன் மூலம் 88 சதவீதம் பேர் பல்வேறு நிதி நிறுவனங்களில் இருந்து தான் கடன் வாங்கியுள்ளனர்.

இரு முக்கியத் தலைகள்

இதுவும் போதாது என்று நீங்கள் நினைத்தால் முகேஷ் அம்பானிக்குப் பின்னால் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை வெற்றிகரமான நிறுவனமாக மாற்ற நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய திறமையான இரண்டு வங்கியாளர்கள் உள்ளனர்.

அருந்ததி பட்டாச்சார்யா, கே.வி.காமத்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ரிலையன்ஸ் குழுவில் உள்ளார். இவரைத் தொடர்ந்து 80 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை கட்டமைத்தவர் கே.வி.காமத் ஜியோ பைனான்சியல்-ன் புதிய non-executive தலைவராக உள்ளார்.

நுகர்வோர் வர்த்தகம்

எப்படி முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறதோ, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை வைத்து ஒட்டுமொத்த நுகர்வோர் வர்த்தகத்தையும் வளர்க்க முடியும்.

பணப் புழக்கம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்கு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் அடித்தளமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைத்தால் வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் அளித்து நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறதோ.

இதேபோல் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மூலம் பணப் புழக்கத்தைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தி வளர்ச்சி அடைய முடியும். மேலும் சக போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் ரிலையன்ஸ் குறைவான வட்டியில் கடன் கொடுக்கும் நிதியில் இருக்கும் காரணத்தால் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதைத் தொடர்ந்து ஜியோ நிறுவனத்தில் மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் என இந்தியாவில் அதிக வாடிக்கையாளர் தரவுகளைக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதால் ரிலையன்ஸ்-க்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமையும். உதாரணமாக மெட்டா-வில் வாட்ஸ்அப் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர், விற்பனையாளர்களை இணைக்கும் தளமாக மாறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments