Friday, April 19, 2024
Homeஅரசியல்செய்திஅமித்ஷவை நேரில் சந்தித்த O.P.S- பரபரப்பான அ. தி. மு.க - அரசியல் களம்.

அமித்ஷவை நேரில் சந்தித்த O.P.S- பரபரப்பான அ. தி. மு.க – அரசியல் களம்.

சென்னை/ காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அகமதாபாத் ஹோட்டல் ஒன்றில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து 15 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்துக்கு சென்று அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் இப்போது அதிமுகவில் பரபரப்பான பேசுபொருளாகி இருக்கிறது.

அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளில் எந்த கோஷ்டிக்கு டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவு இருக்கிறது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக பஞ்சாயத்து குறித்து பேச டெல்லி சென்றிருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அமித்ஷா உள்ளிட்ட யாரும் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தமிழகம் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.
இதனையடுத்தே பாஜகவுடனான உறவை துண்டித்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டார் எடப்பாடி. இதற்கு பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் அவரது வலது, இடது தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் பாஜகவை தூக்கிப் போட்டுவிட்டு திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகளை வளைத்துப் போடலாம் என கணக்குப் போட்டார் எடப்பாடி பழனிசாமி.

இதனையடுத்தே பாஜகவுடனான உறவை துண்டித்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டார் எடப்பாடி. இதற்கு பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் அவரது வலது, இடது தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் பாஜகவை தூக்கிப் போட்டுவிட்டு திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகளை வளைத்துப் போடலாம் என கணக்குப் போட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்தே வரவேற்கும் நிலை ஏற்பட்டது. இதனை எடப்பாடி கொஞ்சமும் ரசிக்கவே இல்லையாம். இதனாலேயே பிரதமர் மோடியை தொடர்ந்து சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கவில்லை. அப்போது செய்தியாளர்கள் இது தொடர்பாக கேட்ட போது, அமித்ஷாவை அவசியம் நான் போய் சந்திக்கனுமா? என எதிர்க் கேள்வி கேட்டார் எடப்பாடி பழனிசாமி. இது அதிமுக, பாஜகவினரை அதிர வைத்தது.
இதன்பின்னர் டெல்லியில் ஜி20 மாநாடுகள் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் அழைக்கப்பட்டார். இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியாகிப் போனது. ஆனால் பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்க தொடங்கிவிட்டது என யூகங்கள், செய்திகள் வலம் வரத் தொடங்கின. இதனால் தமது பாஜக எதிர்ப்பு வியூகத்தை அடக்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

டெல்லியில் எடப்பாடி
இதன்பினன்ர் டெல்லியில் ஜி20 மாநாடுகள் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் அழைக்கப்பட்டார். இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியாகிப் போனது. ஆனால் பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்க தொடங்கிவிட்டது என யூகங்கள், செய்திகள் வலம் வரத் தொடங்கின. இதனால் தமது பாஜக எதிர்ப்பு வியூகத்தை அடக்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

குஜராத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு
இது ஓபிஎஸ் தரப்பை கொந்தளிக்க வைத்தது. இந்த நிலையில் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே பாஜக அழைப்பு அனுப்பியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கேற்கவில்லை. இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாத ஓபிஎஸ், மகன் ரவீந்தரநாத் எம்.பியுடன் நேற்று குஜராத் சென்றார். முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓபிஎஸ், பாஜக அகில இந்திய தலைவர் நட்டாவை சந்தித்தார். பின்னர் அமித்ஷாவை, ஹோட்டல் ஒன்றில் ஓபிஎஸ் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் இச்சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ்- அமித்ஷா சந்திப்புதான் அதிமுகவில் இப்போது ஹைலைட் பேசுபொருளாம்!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments