Friday, March 29, 2024
Homeஇந்திய செய்திகள்அதிரடி காட்டும் மாண்டஸ் புயல் …11 மாவட்டங்களில் பேருந்துகள் மற்றும் விமானம் ரத்து

அதிரடி காட்டும் மாண்டஸ் புயல் …11 மாவட்டங்களில் பேருந்துகள் மற்றும் விமானம் ரத்து

சென்னை: மாண்டஸ் புயல் இன்று மாலை மாமல்லபுரத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னையில் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல 6 மாவட்டங்களுக்கு பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


புயல் சென்னையை நெருங்கி வருவதால் மழை தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே மாண்டஸ் புயல் கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக மணிக்கு 75-85 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் குறிப்பாக கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7ம் தேதி இரவு புயலாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது இது அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மெல்ல வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிதீவிர சூறாவளி என்கிற நிலையிலிருந்து வலுவிழந்து சூறாவளி புயலாக இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் என 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்திருக்கிறது. அதேபோல விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது சென்னையிலிருந்து சிங்கப்பூர், டாக்கா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான சேவையில் நேற்று தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, ஷீரடி மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் அங்கிருந்து சென்னை திரும்பும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் மேலும் தீவிரமடையும் நிலையில் இன்னும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments