Monday, June 5, 2023
Homeயாழ்ப்பாணம்வேலணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் உயிரிழப்பு!

வேலணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் உயிரிழப்பு!

வேலணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும் சமூக சேவையாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) காலமானார்.

இவர் நேற்று (01.11.2022) மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இறுதிக்கிரியைகள் நாளை (03.11.2022) பிற்பகல் 1 மணியளவில் யாழ்ப்பாணம் மானிப்பாய்விலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற உதவியாளராகவும், சமூக ஆர்வலராகவும், யாளியில் வெளியாகும் செய்தித்தாள்களில் சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் ஹேமலதா நினைவு நிதியத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments