Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்!

வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்!

வீடொன்றில் பெற்றோர் தனது இரு பெண் குழந்தைகளை கைவிட்டு சென்றதையடுத்து பொலிஸார் அக்குழந்தைகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவடானது நேற்று அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இதனையறிந்த அயலவர்கள் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கு நீதிமன்றில் அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments