Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்!

வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி கனடா செல்ல முற்பட்ட 306 இலங்கையர்கள் படகு பழுதடைந்ததை அடுத்து வியட்நாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், வியட்நாமில் உள்ள இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமுக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை அதிகாரிகளுடன் செல்ல முடியாது என்றும், தங்களை வலுக்கட்டாயமாக அனுப்ப முயன்றால் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்றும் சிக்கிய இலங்கையர்கள் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகவர்கள் ஏமாற்றிய போது, ​​முகாமுக்கு வந்த அதிகாரிகள் தங்களை நாடு திரும்புமாறு வற்புறுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments