Monday, May 29, 2023
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியா நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் எவரும் இல்லாத போது குறித்த இளைஞன் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.

வீட்டார் வந்த போது குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து நெளுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்படுள்ளது,

இளைஞனின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments