Thursday, September 28, 2023
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய இராணுவப் பேருந்து!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய இராணுவப் பேருந்து!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​குறித்த மோட்டார் சைக்கிள் மீது அதே பாதையில் பயணித்த இராணுவ பஸ் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments