Monday, March 27, 2023
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவர விசேட இலக்கம் அறிமுகம்!

வவுனியாவில் போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவர விசேட இலக்கம் அறிமுகம்!

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை , குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.

வவுனியாவில் பரவிவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு அறிவித்தல் வழங்க பின்வரும் விஷேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments