Thursday, September 28, 2023
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பம்!

வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பம்!

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 12,000 ஏக்கர்களில் மேறகொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் அறுவடைக்கு 20 லீற்றர் டீசல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சேதன பசளையை பாவித்தே சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அறுவடை சற்று குறைந்த போதும் ,சந்தையில் நெல் விலை அதிகரித்துக் காணப்படுவதன் காரணமாக தமக்கு அதிக இலாபம் கிடைப்பதாக பிரதேச விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments