Thursday, September 28, 2023
Homeஉலக செய்திகள்ரஷ்ய - உக்ரைன் போர் : டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்.

ரஷ்ய – உக்ரைன் போர் : டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்.

ரஷ்ய – உக்ரைன் போரை தற்போதைய அமெரிக்க அரசாங்கம் ஒழுங்காக கையாளவில்லை என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஓராண்டு கடந்தும் நீடிக்கும் இப்போர் குறித்து காணொளி மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அந்த விமர்சனத்தில், நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் புடின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன்.

போர்ச் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்.

இப்போது அமெரிக்கா தாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை கொடுக்கப்போகிறது? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ரஷ்ய அதிபர் புடின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது.

3ஆம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் போரை நிறுத்திக் காட்ட என்னால் மட்டுமே முடியும்” – என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments