யாழில் பிரபல மருத்துவரின் மகளான கொழும்பு மருத்துவபீட மாணவி போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மருத்துவபீடத்தில் இருந்த நிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன் போதையின் போது பலருடன் பாலியல் உறவைப் பேணியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் சம்பவம் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே பலருக்கும் தெரிந்துள்ளது.
யாழ் நகரப் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் படித்த இந்த மாணவி க.பொ.த(உயர்தரத்தில்) விஞ்ஞானப்பிரிவில் ஆங்கில மொழிமூலம் கற்று மாவட்ட மட்டத்தில் முன்னிலையில் வந்தவர். அத்துடன் நல்லொழுக்கமாகவே பாடசாலையில் படித்துள்ளார். தாயும் தந்தையும் யாழ்ப்பாணத்தில் பெயர் குறிப்பிடத்தக்க அனைவருக்கும் தெரிந்த பிரபலமான மருத்துவர்கள். மிகவும் கண்ணியமாகவே யாழில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி கொழும்பு பல்லைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய பின்னர் கொடூரமான முறையில் நடத்தை மாற்றம் ஏற்பட்டது ஏன்?
யாழ்ப்பாணத்தின் திறமை மிகு மாணவர்கள் பல்வேறு வழிகளில் திட்டமிட்டு இவ்வாறு சதிவலையில் சிக்க வைக்கப்பட்டு கெடுக்கப்படுகின்றார்களா? பெற்றோரின் அரவணைப்பில் கட்டுப்பாடுகளுடன் கற்று வந்த குறித்த மாணவி கொழும்பு சென்ற பின்னர் கட்டுப்பாடுகளைக் களைந்து சுதந்திரமான போக்கை கடைப்பிடித்துள்ளாரா? அதனால் இவ்வாறான போதைப் பொருள் பழக்கம் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபாட்டைக் காட்டினாரா? தற்போது குறித்த மாணவி தனது வாழ்கையை இழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மனநல நிபுணர் ஊடாக அவருக்கு தீவிர மனநல சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இருந்தாலும் மாணவியை சகஜ நிலைக்கு கொண்டு வருவது மிகவும் கஸ்டம் என அறிய முடிகின்றது.
குறித்த மாணவியை எவ்வாறு போதைக்கும் பாலியல் உறவுக்கும் அடிமையாக்கினார்கள்?
மாணவி ஏனைய நண்பிகளுடன் இரவில் குறுாப்பாக கற்கும் வேளைகளில் போதைப் பொருள் பாவித்தால் நித்திரை வராது கற்கலாம் என துாண்டப்பட்டாரா?
துடிப்பான அழகான மாணவி என்ற காரணத்தால் மாணவிக்கு அவளது நண்பிகள் அல்லது நண்பர்கள் ஊடாக மென்பாணங்கள் அல்லது பழச்சாறுகள் மூலம் போதைப் பொருள் கலந்து தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டதா?
மாணவியே தனக்கு பெற்றோரால் வழங்கப்பட்ட சுதந்திரமான போக்கை தவறாகப் பயன்படுத்தி பரீட்சார்த்த முறையில் போதைப் பொருளை பாவிக்க ஆசைப்பட்டாரா?
எது எப்படியே இனிவரும் காலம் கொழும்பு பல்கலைக்கழகம் மட்டுமல்ல ஏனைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்காக கற்கச் செல்லும் மாணவர்கள் தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனத்தை மேற்கொள்ளுங்கள். 5 வயதுப் பிள்ளையை நேசறிக்கு எவ்வாறு பாதுகாப்பாகக் கொண்டு சென்று விட்டீர்களோ அதே கவனத்தையும் பாதுகாப்பையும் வளர்ந்ந பிள்ளைகளிடத்திலும் அவர்கள் அறியாதவாறு மேற்கொள்ளுங்கள். மேற்படிப்புகளுக்காக செல்லும் பிள்ளைகளின் நடத்தைகளை கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றுங்கள். மகனோ அல்லது மகளோ வளர்ந்து விட்டார்கள்தானே… இனி அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என நினைக்காதீர்கள்…
ரீனேஜ் பருவத்தை தாண்டியவர்களே தற்போது போதைப் பொருள் மற்றும் பாலியல் துர்நடத்தைகளில் அதிகமாக ஈடுபடுகின்றார்கள். ஆகவே உங்கள் பிள்ளைகள் தொடர்பான நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக கையாளுங்கள். இல்லாவிடின் நீங்களும் நடைப் பிணமாக சமூகத்தின் மத்தியில் திரியும் நிலை ஏற்படலாம்.