Thursday, September 28, 2023
Homeயாழ்ப்பாணம்யாழ். தனியார் விடுதியில் நடந்த ஒப்பனை அழகி கூத்து முண்டியடித்த யாழ்ப்பாணிஸ்..!

யாழ். தனியார் விடுதியில் நடந்த ஒப்பனை அழகி கூத்து முண்டியடித்த யாழ்ப்பாணிஸ்..!

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடத்தப்படும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி நேற்றைய தினம்(30) யாழ் திருநெல்வேலியில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

அதில் 50 ற்கு மேற்பட்ட அழகுக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், திருமணத்துடன் தொடர்புடைய பல விடயங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

யாழ்பாணத்து அழகிகள் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலும் வலம் வருகின்ற அழகிகள் கலந்து கொண்டு தமது ஒப்பனையுடன் கூடிய அழகினை வெளிப்படுத்தினர்.

பல வகையிலான மணப்பெண் அலங்காரங்கள் அங்கு இடம்பெற்றிருந்தது.

அத்துடன் அதில், தமிழர்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் பல வர்ணங்களில் சேலை அணிந்தும், மொடல் ஆடைகளை அணிந்தும் பெண்கள் தம்மை அலங்காரம் செய்து அழகினை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வருகை தந்த அழகிகளை கண்டு கழிப்பதற்காக வாலிபர்கள் பலர் அந்த மண்டபம் முழுவதுமாக குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments