Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை!

யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை!

தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக 600 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாடு –பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments