Wednesday, March 29, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் வீதியில் சென்றவர் மீது வாள்வெட்டு!

யாழில் வீதியில் சென்றவர் மீது வாள்வெட்டு!

நேற்று (10) மதியம் 1.30 மணியளவில், யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபாற்பெட்டி சந்தி பகுதியில் வீதியில் பயணித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு, வாள்வெட்டினை மேற்கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர் அங்கிருந்தவர்கள் மூலம் காப்பாற்றப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில், அரியாலை பகுதியைச் சேர்ந்த தர்மரத்தினம் கணேஸ்வரன் (42) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments