வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று வாகன ஊர்வலம் நடைபெற்றது.
இதன் போது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சிவப்புக் கொடி ஏந்தியவாறு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமாகி யாழ்.கஸ்தூரியார் வீதியில் நிறைவடைந்தது.