Thursday, September 28, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 60 வயது பெண் !

யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 60 வயது பெண் !

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது 60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments