Saturday, March 25, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் பொலிஸ் உத்தியோகத்தரை மிரட்டிய மொட்டு கட்சி உறுப்பினர் !

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரை மிரட்டிய மொட்டு கட்சி உறுப்பினர் !

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய பொதுஜன பெரமுன கட்சி யாழ். மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணி விவகாரம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தரை தொலைபேசியில் அச்சுறுத்திய பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் விசாரணைக்கு யாழ்.மாவட்ட அலுவலகத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், விசாரணைக்கு வரவில்லை என்றால் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருடன் இடமாற்றம் செய்யப்படுவேன் எனவும் கடுமையான தொனியில் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தனது கடமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments