Tuesday, March 28, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு : மீட்கப்பட்ட கசிப்பு உற்பத்தி பொருட்கள்!

யாழில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு : மீட்கப்பட்ட கசிப்பு உற்பத்தி பொருட்கள்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் இருந்து 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை இன்றைய தினம் (27-10-2022) இடம்பெற்றுள்ளது.

இக் கைது நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சாலை ஒன்றினை நடாத்துவது போல் பாவனை செய்து குறித்த பகுதியில் இவ்வாறு கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments