Thursday, September 28, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் பேருந்தை முந்தி செல்ல முயன்ற இளைஞன் ! சம்பவ இடத்தில் பலியான பின்னால் அமர்ந்திருந்த...

யாழில் பேருந்தை முந்தி செல்ல முயன்ற இளைஞன் ! சம்பவ இடத்தில் பலியான பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் !

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று இரவு பயணிகள் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.வோதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பூதர்மடம் பகுதியைச் சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து அச்சுவேலி நோக்கிச் சென்ற கோப்பாய் புத்தர்மடச் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எதிரே வந்த காருடன் மோதியதில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments