Friday, September 22, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் பகற்கொள்ளையில் தமிழ் பொலிஸார்!

யாழில் பகற்கொள்ளையில் தமிழ் பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக நிறுவன ஊழியர் ஒருவரிடம் பணப் பையை பறித்து 1500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில்,

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளில் கலைத்துக் கொண்டு வந்து நிறுத்தி நீ விபத்து ஏற்படுத்தும் முகமாக பயணிக்கிறாய் என கூறியதுடன், உனக்கு நீதிமன்றத்திற்கு வழக்கு எழுதப்போகின்றேன் எனக்கூறி வழிமறித்து எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது ஊழியரின் பணப்பையினை பறித்து 1500 ரூபா பணத்தினை எடுத்துவிட்டு பணப்பையை திருப்பி கொடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவ தொடர்பில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments