Monday, May 29, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் கைதான நபர் வெளியான காரணம்!

யாழில் கைதான நபர் வெளியான காரணம்!

யாழ். வடமராட்சி, மானாண்டி பகுதியில் 2 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அல்வாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments