Thursday, September 28, 2023
Homeயாழ்ப்பாணம்யாழில் கிறீஸ் கத்தியைக் காண்பித்து பொலிஸாரை அச்சுறுத்தி தப்பித்தவருக்கு நேர்நத கதி !

யாழில் கிறீஸ் கத்தியைக் காண்பித்து பொலிஸாரை அச்சுறுத்தி தப்பித்தவருக்கு நேர்நத கதி !

யாழில் கிறீஸ் கத்தியைக் காண்பித்து பொலிஸாரை அச்சுறுத்தி தப்பித்த ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

உரும்பிராய் சந்தியில் கடந்த வாரம் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், உந்துருளியில் பயணித்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டனர்.

அதன்போது காவல்துறையினருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய அவர்கள் இருவரும், தாம் பயணித்த உந்துருளி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடினர்.

இந்தநிலையில் இரண்டு நாட்களாக தலைமறைவாகியிருந்த அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தமது சட்டத்தரணி ஊடாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதனையடுத்து இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவர் சார்பிலும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது. எனினும் அதனை நிராகரித்த நீதிவான், இருவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments