Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்யாழில் எரிபொருளுக்காக காத்திருத்த நபரொருக்கு நேர்ந்த சோகம்!

யாழில் எரிபொருளுக்காக காத்திருத்த நபரொருக்கு நேர்ந்த சோகம்!

கொக்குவிலில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்ற நபரொருவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (10-08-2022) மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 40 வயதுடைய சொரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று QR குறியீட்டை காண்பித்த அவர், திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments