Thursday, September 28, 2023
Homeஇலங்கை செய்திகள்யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு !

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு !

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு மனைவி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று (05) மாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளும், ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 39 வயதுடைய அற்புதசிங்கம் சுதர்சன் உயிரிழந்துள்ளதோடு அவரது மனைவி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments