Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்யாழில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம் !

யாழில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம் !

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் வாசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments