Saturday, September 30, 2023
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியின் 20வது கிலோமீற்றர் காட்டுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சின்னசாளம்பனைச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24-11-2022) மாலை மண்வெட்டி மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மெனிக்பாம் கிராமத்தின் ஒட்டுசுட்டான் சின்னசாளம்பனைச் என்ற இடத்தில் வசிக்கும் பச்சிமுத்து புலேந்திரன் (வயது 48) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments