Thursday, March 30, 2023
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது!

முல்லைத்தீவில் கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 42 வயதான குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடம் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700 மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments