Thursday, September 28, 2023
Homeஉலக செய்திகள்மலேசியாவின் 10 ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமிப்பு !

மலேசியாவின் 10 ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமிப்பு !

மலேசியாவின் 10வது பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று (24.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவின் விருப்பப்படி அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய நேரப்படி இன்று (24.11.2022) மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரண்மனையின் இந்த அறிவிப்பால் மலேசியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments