Tuesday, May 30, 2023
Homeஇலங்கை செய்திகள்மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிட்ட தாயாருக்கு நேர்ந்த சோகம் ! தாய் இல்லாமல்...

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிட்ட தாயாருக்கு நேர்ந்த சோகம் ! தாய் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகத்தில் இருந்து சளி மருந்தை உட்கொண்ட 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருந்தகத்தில் இருந்து தொண்டை வலிக்கான மருந்தை உட்கொண்ட பெண் ஒருவரே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிக்கட்டு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மலிதி குமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தொண்டை வலி, தொண்டை வலிக்கான மருந்தை மருந்தகத்தில் இருந்து பெற்றுள்ளார்.

மருந்தை உட்கொண்டதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அம்புலன்ஸ் மூலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மறுநாள் உயிரிழந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மரணம் வெளிப்படையான தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மாவட்ட மரண விசாரணை அதிகாரி எஸ்.கே.பி.ஜானக கொடிகார உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments