Saturday, September 30, 2023
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்மன்னார் நகர சபையினால் கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு!

மன்னார் நகர சபையினால் கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு!

மன்னார் நகர சபையின் வருடாந்த ஒதுக்கீடு ஊடாக நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(20) காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.

-மன்னார் நகர சபையின் தலைவர் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த திட்டத்தின் மூலம் 130 க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள்,செயலாளர்,கணக்காளர், சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு பொதிகளை வழங்கி வைத்தனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments