Tuesday, March 28, 2023
Homeஇலங்கை செய்திகள்மன்னாரில் நீதிமன்றத்தில் வைத்திருந்த சான்று பொருட்களை திருடிய பொலிஸ் அதிகாரி கைது!

மன்னாரில் நீதிமன்றத்தில் வைத்திருந்த சான்று பொருட்களை திருடிய பொலிஸ் அதிகாரி கைது!

மன்னார் நீதிமன்றத்தில் வைத்திருந்த சில சான்ற பொருட்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நீதிமன்றத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சில சான்ற பொருட்கள் திருடப்பட்டதையடுத்து பொலிஸார் சோதனையில் இறங்கினர்.

இதனையடுத்த மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய மன்னார் நீதிமன்றத்தின் காவல் அதிகாரிகள் தங்கும் பகுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது.

இதன்போது திருடிவைக்கப்பட்டுள்ள சான்று பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம்(கசிப்பு) ஆகியவற்றை சோதனையிட்ட பொலிஸார் மீட்டுள்ளனர்.

இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரை இருவரை கைது செய்து நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபோவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments