Monday, January 30, 2023
Homeஅரசியல்செய்திபுதுச்சேியில் தி மு க ஆட்சியமைய வேண்டும் என்ற ஸ்டாலின் விருப்பம் தவறு இல்ல…நாராயண சாமி...

புதுச்சேியில் தி மு க ஆட்சியமைய வேண்டும் என்ற ஸ்டாலின் விருப்பம் தவறு இல்ல…நாராயண சாமி பேச்சு.

புதுச்சேரி: “புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதில் தவறில்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணிக்கு காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும் என்று நாராயணசாமி தெரிவித்திருந்தார். திமுகவுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா பதில் தந்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, புதுவையிலும் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என ஸ்டாலின் கூறியதில் தவறில்லை. திமுகவினரை உற்சாகப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வாறு பேசியுள்ளார் என விளக்கமளித்தார். தமிழகத்தை போலவே புதுவையிலும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments