Thursday, September 28, 2023
Homeஇலங்கை செய்திகள்பாடசாலை தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இன்றையதினம் முதலாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மே 29 ஆம் தகதி நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கான தவணை விடுமுறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்து இருந்தது.

எனினும் விடுமுறை கால அட்டவணை வெளியாகவில்லை. இந்த நிலையில் குறித்த அட்டவணை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடைநிலை வகுப்புகளுக்கான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய சுற்றறிக்கையையும் கல்வி அமைச்சு இதனுடன் வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments