Saturday, March 25, 2023
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்பட்டாரக வாகனம் விபத்து. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பட்டாரக வாகனம் விபத்து. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், அவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments