பூமியில் இருந்து கொண்டு நிலவிற்கு ரயில் அமைக்க தனது முதல் பணியை தொடங்கியுள்ளதாக ஜப்பானிய பல்கலைக்கழகமான கியோடா யூனிவர்சிட்டி மற்றும் காஜிமா கார்ப்ரேஷன் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இந்தத்தகவலை ஜப்பானிய செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
நிலாவிற்கு ரயில் விடும் பணியானது நிறைவுபெற 100 வருடங்கள் ஆகும் எனவும் அதற்கான ஆரம்பக்கட்ட வேலையான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதாக குறித்த நிறுவனங்கள் கூறியுள்ளது.

இந்த செயல்முறை நிறைவுபெற 100 வருடம் ஆகின்ற நிலையில் வருகின்ற 2050ம் வருடம் நிலவிற்கு பூமியில் செல்லக்கூடிய ரயிலினை வடிவமைத்து சோதனை ஓட்டத்தை ஆரம்பிக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலும் இந்த ரயில் பயணமானது நிலவுடன் மட்டும் முடிவுபெறாமல் நிலவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கும் செவ்வாய் கிரகத்தில் இருந்து மீண்டும் பூமிக்கும் வரும் வகையில் ஒரு முக்ககோண வடிவிலான பாதையமைப்பு மூலம் இந்த ரயில் சேவையை வடிவமைக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலவிற்கு செல்வது மட்டுமல்லாமல் சுமார் 100 கோடி பேர் வசிக்கும் வண்ணம் செயற்கை நுண்ணறிவு மூலம் நிலவில் ஒரு பூமி போன்ற அமைப்பை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பிற்கு மூன் கிளாஸ் எனும் பெயரினை சூட்டியுள்ளார்கள்.
மேலும் ஜப்பான் நாசாவுடன் கைக்கோர்த்துகொண்டு நிலவிற்கு செள்ளவுள்ளதாகவும் அப்படி சென்றால் நிலவிற்கு செல்லும் இரண்டாவது நாடாக ஜப்பான் வரும் எக ஆய்வுகள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.