Thursday, September 28, 2023
Homeஇலங்கை செய்திகள்நாளை யாழிலும் அதிரப்போகும் ஆர்ப்பாட்டம்!

நாளை யாழிலும் அதிரப்போகும் ஆர்ப்பாட்டம்!

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலுக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை இடம்பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை பதிவி விலகக்கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ். நகர் நோக்கி துவிச்சக்கர வண்டிப் பேரணியை முன்னெடுக்க உள்ளதாக பொது அமைப்புகள் கூறியுள்ளன.

இது குறித்து யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக் குழு, தேசிய கலை இலக்கிய பேரவை, தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம், குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனிஸ கட்சி,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகிய பொது அமைப்புகள் ஆதரவளிப்பதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை ஜூலை 9 ஆம் திகதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகளால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments