Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை நாளை நள்ளிரவு முதல் மேலும் குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற் கொண்டு விலை சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 12.5 கிலோ லீற்றர் LPG கொள்கலன் ஒன்றின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டது.

12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலன் ரூ.4,664க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 5 கிலோ எடையுள்ள எரிவாயு கொள்கலனின் விலை 99 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments