Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக மது பாவனை குறைவு ஆனால் வருமானம் அதிகரிப்பு!

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக மது பாவனை குறைவு ஆனால் வருமானம் அதிகரிப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை குறைந்துள்ள போதிலும் கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆண்டின் முதல் 10 மாதங்களில், 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, பல்வேறு காரணங்களால் மதுபானத்தின் தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உரிமம் பெற்ற மதுபான தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியின் மூலம் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரியை எந்தவித முரண்பாடுகளும் இன்றி அரசாங்கம் வசூலிக்க முடியும் என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments