Thursday, September 28, 2023
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்நாட்டில் எது நடந்தாலும் எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது- மன்னார்...

நாட்டில் எது நடந்தாலும் எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் !

நாட்டில் எது நடந்தாலும் எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலகமும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்த புத்தக வெளியீடு, கலைஞர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (16) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,, இன்றைய நிகழ்வை பார்த்து எவரும் நினைக்கலாம் நாட்டில் பிரச்சனை இல்லையென்று. நாட்டில் எது நடந்தாலும் எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எமது கலை கலாச்சாரம் நவீன தொலை தொடர்பு வளர்ச்சியால் பல்வேறு பொருளாதார செயற் பாடுகளாலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். இந்த சவால்களை எதிர்த்து நாம் எமது கலை கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த சவால்களை எமது இளைய தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. எங்களுக்கு என்று ஒரு பண்பாடு இருக்கின்றது. வந்தோரை வரவேற்றல். பெரியோரை கனம் பண்ணுதல், பெற்றோரை மதித்தல் நன்றியுள்ளவர்களாக இருத்தல் ,முதியோரை பராமரித்தல் அவர்களின் சொல்லை கேட்டு நடத்தல் போன்ற பண்பாடு எம்முடன் பின்னி பிணைந்திருக்கின்றது.

இந்த பண்பாடு இன்றைய எமது சிறிய தலைமுறைக்கு ஒரு சவாலாக காணப்படுகிறது.இந்த சவாலை இளையோர் எதிர்கொள்ள அவர்கள் சிந்திக்க இவ்வாறான நிகழ்வுகள் அவசியமாகின்றது. இதை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கி இவ்வாறான நிகழ்வை மாவட்டந்தோறும் நடத்துகின்றது. எம்மிடம் நிதி பற்றாக்குறையை காணப்படுகின்ற போதும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை இவ் நிகழ்வை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற சிந்தனையில் இதை முன்னெடுத்துள்ளது. எமது சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தனின் முயற்சியே இதற்கு பெரும் சாதனையாக இருக்கின்றது. இங்கு வெளியீடு செய்யப்பட்ட புத்தக வெளியீட்டுக்கு மன்னார் கலை பண்பாட்டுப் பேரவை பெரும் ஆக்கமும் ஊக்கமும் கொண்டிருந்தது

. எமது கலை பண்பாடு எம் ஒவ்வொருவரினதும் வாழ்விலும் தெளிவுபெற வேண்டும். எமது மாவட்டத்தில் ஒரு சிலர் கலை பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என அரும்பாடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் கலா மன்றங்கள் உருவாக்கி கலை பண்பாடுகளை வளர்த்து பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான கலைஞர்களையே இன்றைய தினம் நாம் கௌரவிக்கின்றோம். அத்துடன் பல சவால்களுக்கு மத்தியிலும் எமது கலை கலாசார மற்றும் மாவட்ட செய்திகளையும் உலகம் அறிய கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களையும் நாம் கௌரவிக்கின்றோம் என என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments