பூஜா ஹெக்டே
இந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த எந்த படமும் வெற்றியடையவில்லை

அடுத்ததாக பாலிவுட்டில் உருவாகியுள்ள சர்க்கஸ் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. அதே போல் சல்மான் கானுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
56 வயது நடிகருடன் காதல்
இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் காணும் நடிகை பூஜா ஹெக்டேவும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சமீபகாலமாக ஒன்றாக அதிக நேரம் செலவழித்து வருகிறார்களாம்.
மேலும் சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னும் இரு திரைப்படங்களில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவை அனைத்தும் சல்மான் கானின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல் என கூறப்படுகிறது.
ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. 56 வயதாகும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.