Thursday, March 30, 2023
Homeவிளையாட்டுடுபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்.

டுபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்.

டுபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்யத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஏற்கனவே, மெத்வதேவ் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் டுபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments