Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்டிபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவக் கப்டன் பலி!

டிபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவக் கப்டன் பலி!

டிபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவக் கப்டன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த டிபென்டர் வாகனம் இன்று அதிகாலை திருகோணமலையில் இருந்து மாதுரு ஓயா நோக்கிப் பயணித்துள்ளது.

சாரதி, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்லவில் உள்ள மரத்துடன் மோதியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிபென்டர் ரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர் நான்காம் விசேட படையைச் சேர்ந்த கப்டன் தேவிந்த உட்வார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments