Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்சீன கப்பலின் வருகையால் ஏற்பட்ட இராஜதந்திர நெருக்கடி!

சீன கப்பலின் வருகையால் ஏற்பட்ட இராஜதந்திர நெருக்கடி!

சீனக் கப்பல் வருகை தொடர்பில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடியை அடுத்து, அரசாங்கம் புதிய முடிவை எடுத்துள்ளது.

இதன்படி, இலங்கைக்குள் பிரவேசிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிக்க அரசாங்கம் தனது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறையை உருவாக்கவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகர்காரியவாசம் மேற்பார்வையில் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுமதிப்பதற்கான புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறைகளை அரசாங்கம் விரைவில் அமுல்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments