Thursday, March 30, 2023
Homeஇலங்கை செய்திகள்சிவராமை கொலை செய்தவர் கைகளில் சிவராம் உருவாக்கிய த.தே.கூட்டமைப்பு!!

சிவராமை கொலை செய்தவர் கைகளில் சிவராம் உருவாக்கிய த.தே.கூட்டமைப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஊடகவியலாளர் சிவராம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

ஆனால் சிவராம் கொலையின் பின்னணியில் யாருடைய பெயர் அடிபட்டதோ அந்த நபரால் பதிவுசெய்யப்பட்ட சின்னதத்தைதான் கூட்டமைப்பு தற்பொழுது சுமந்துகொண்டிருக்கின்றது என்று சுட்டிக்காண்பிக்கின்றார்கள் சில சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்.

த.தே.கூட்டமைப்பு தற்பொழுது தேர்தலில் போட்டியிடுகின்ற சின்னம் குத்துவிளக்குச் சின்னம்.

இந்தக் குத்துவிளக்குச் சின்னம் புளொட் அமைப்பினால் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டது என்பதுடன், சிவராம் படுகொலையுடன் தொடர்புபட்டுப் பேசப்பட்ட ஒருவராலேயே இந்தச் சின்னம் தேர்தல் ஆணையகத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டது.

இந்த விடயத்தைச் சுட்டிக் காண்பித்த ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர், ‘சிவராமை கொலை செய்தவர் கைகளிலேயே சிவராம் உருவாக்கிய த.தே.கூட்டமைப்பு கடைசியில் வந்துசேர்ந்திருப்பது என்பது எப்படியான ஒரு முரன்நகை’ என்றுகூறிக் கவலைப்பட்டார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments