Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்க பொ த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் !

க பொ த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நாட்டின் 3844 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்காக 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments