Monday, March 27, 2023
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் பரபரப்பு; மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு! ஒருவர் கைது!

கொழும்பில் பரபரப்பு; மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு! ஒருவர் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு தாமரை தடாகத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரால் இந்த கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மலர் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மேலும், ஒரு மாணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments