உங்கள் கையில் இருக்கும் போன் சரியாக வேலை செய்யவில்லையா? அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு யூடியூப் பார்ப்பதற்கும், அழைப்புகளை ஏற்பதற்கும் ஒரு டீசெண்டான ஸ்மார்ட்போன் மாடலை வாங்கத் திட்டம் தீட்டி வருகிறீர்களா? அதிகம் செலவில்லாமல், மனதிற்குத் திருப்தி அடையும் வகையில் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலை கம்மி விலையில் எதிர்பார்க்கிறீர்களா?
அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான். ரூ. 6000 விலை புள்ளி முதல் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் (Budget smartphones) பட்டியலை தான் இங்கு உங்களுக்காக தொகுத்திருக்கிறோம். இங்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புது பிராண்டட் ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது இப்போது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்தமான டிவைஸை தேர்வு செய்யுங்கள்.

கம்மி விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரெண்டி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த Redmi A1 மாடலை தான் சாரும். இந்த போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ரூ. 5,900 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் இத்துடன் கிடைக்கிறது.
குறைந்த விலையில் மிகவும் டீசெண்டான அம்சங்களுடன் நமது பட்டியலில் இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இது தான். இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையில், இதன் வெறும் ரூ. 7,499 என்ற விலைக்கு இதை நாம் வாங்க முடியும். உங்களிடம் பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தால், அதை ரூ. 7,100 வரை எக்ஸ்சேஞ் செய்து, இதன் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும்.
கம்மி விலையில் அதிகமான ரேம் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டும் தான் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். இந்த ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 7,500 வரையிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.
குறைந்த விலையில் பெஸ்டான போன் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய மாடல் இந்த Redmi 10A மட்டும் தான். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இதன் சலுகை உடன் இப்போது ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது. இந்த டிவைஸ் மீது உங்களுக்கு இப்போது ரூ. 7,500 எக்ஸ்சேஞ் தள்ளுபடி கிடைக்கிறது.