Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்குறைகிறது பேக்கரி உற்பத்திகளின் விலை! வெளியான அறிவிப்பு !

குறைகிறது பேக்கரி உற்பத்திகளின் விலை! வெளியான அறிவிப்பு !

அரசாங்கம் தலையிட்டு மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு வந்துள்ளனர். இப்போது ஒரு முட்டை ரூ.65க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவின் விலை ஒவ்வொரு நாளும் சீராக ஏறிக்கொண்டிருக்கிறது.

வெண்ணெயின் சந்தை விலை நிச்சயமாக எங்களால் எட்ட முடியாததாக இருக்கிறது.

இந்தியாவில் முட்டை ஒன்றின் விலை ரூ. 18. அரசு அவற்றை இறக்குமதி செய்து வாங்கினால் பாணின் விலையை 30 முதல் 50 ரூபாய் வரை குறைக்க முடியும்.

சந்தையில் கோதுமை மாவின் விலையில் கட்டுப்பாடு இல்லை. சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி டீலர்கள் மற்றும் ஏஜென்சிகள் தங்கள் விருப்பப்படி விலையை உயர்த்துகிறார்கள்.

எனவே, பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவையான மூலப்பொருட்களை நியாய விலையில் வழங்கினால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments